Saturday, 22 July 2017

என் ஆயன் இயேசு

என் ஆயன் இயேசு பாடல்



என் ஆயன் இயேசு  பாடல் வரிகள்


என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது
என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி மகிழும் வேளையிது - 2
என் தவம் நான் செய்தேன் எந்நன்றி நான் சொல்வேன் - 2

பல்லவி - 1
பசியால் வாடும் ஏழையின் நிலையில் பாவி நான் நின்றிருந்தேன்
பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி அருளமுதை ஈந்தார் - 2
அருளமுதை ஈந்தார்

பல்லவி - 2
கருணையின் அமுதே பவித்திர அழகே காலமெல்லாம் வருவாய்
பெருமையின் வேந்தே பேரருட்சுடரே
பாசத்தினைப் பொழிவாய் - 2
பாசத்தினைப் பொழிவாய்

பல்லவி - 3
அகிலமும் உமதே ஆற்றலும் உமதே ஆண்டவனே எழுவாய்
இகமதில் இனிமை பொழிந்திடும் இறைவா
இன்புறவே எழுவாய் - 2
இன்புறவே எழுவாய்

நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன்

நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன்



நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன் பாடல் வரிகள்


நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன்
உனையழைத்தேன் நீ வா வா
சிந்தையெல்லாம் நொந்தழுதேன் -2 சொந்தமெல்லாம்

பல்லவி - 1
அன்புமொழி பேசும் இன்பமுகில் இயேசு
எந்நாளும் நண்பன் நீயே - 2
கண்ணின் மணிபோல காத்திடுவோனே - 2
உன் அன்பு ஒன்றே நான் வேண்டினேன்

பல்லவி - 2
வானின் முழு நிலவே வாழும் உயிர்ச்சுடரே
நீயின்றி வாழ்வேதைய்யா - 2
பாடி வரும் தென்றலில் ஆடிடும் மலராய் - 2
உன் ஆசீர் தந்தால் மகிழ்வேனைய்யா

பல்லவி - 3
சோகம் வந்து தாக்கும் போது என்னைக் காக்கும்
என் ஆயன் நீயே அன்றோ- 2
மாசு கொண்ட உள்ளம் பேசும் உந்தன் நாமம்
இயேசு எந்தன் வாழ்வின் தெய்வம் நீயே

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ



நெஞ்சத்திலே தூய்மையுண்டோ பாடல் வரிகள்


நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார் - 2

பல்லவி - 1
வருந்திச் சுமக்கும் பாவம் நம்மைக் கொடிய இருளில் சேர்க்கும்- 2
செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் -2
அவர் பாதம் வந்து சேரும்

பல்லவி - 2
குரதி சிந்தும் நெஞ்சம் உன்னை கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
செய்த பாவம் இனி போதும் அங்கு பாரும் செந்நீர் வெள்ளம்
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம்

தெய்வ தரிசனம் தேடும் மனம் தினம்

தெய்வ தரிசனம் தேடும் மனம் தினம்



தெய்வ தரிசனம் தேடும் மனம் தினம் பாடல் வரிகள்


தெய்வ தரிசனம் தேடும் மனம் தினம்
தேவன் வரவிலே ஜீவன் உருகிடும்
இதைப் பாடாத நாளில்லையே இதைத் தேடாமல் வாழ்வில்லையே
இறைவா இறைவா என் இதயம் இணைவாய் - 2

பல்லவி - 1
வாழ்வு வழங்கும் வல்ல தேவன் வரவு என்னிலே
வசந்தம் என்றும் வசந்தம் எந்தன் வாழ்வு தன்னிலே
வானதேவன் வார்த்தை இங்கு வடிவம் ஆனதே
வானும் மண்ணும் அழிந்த பின்னும் வாழும் என்னிலே
ஒளியே ஒளியே உலகின் ஒளியே
உயிரே உயிரே உயிரின் உயிரே - உமைப் பாடாத....

பல்லவி - 2
அன்பிற்காக ஏங்கும் நெஞ்சம் ஆசை ஓய்ந்திடும்
அழிவில்லாத அன்பின் நேசம் அரவணைத்திடும்
நினைவில் ஆடும் நிழல்கள் யாவும் நிஜங்களாகிடும்
நீங்கிடாமல் நிறைவின் நேசம் நிதமும் தொடர்ந்திடும்
ஒளியே ஒளியே உலகின் ஒளியே
உயிரே உயிரே உயிரின் உயிரே - உமைப் பாடாத....

சொந்தம் தேடும் எந்தன் உள்ளம் இயேசுவே வாரும்

சொந்தம் தேடும் எந்தன் உள்ளம் பாடல்



சொந்தம் தேடும் எந்தன் உள்ளம்  பாடல் வரிகள்


சொந்தம் தேடும் எந்தன் உள்ளம் இயேசுவே வாரும்
சுமைகள் சுமந்து சோர்ந்த வாழ்வில் அமைதியைத் தாரும்- 2
உறவில் நானும் வளர்ந்திட உன் அருளைப் பொழிந்திடு

பல்லவி - 1
ஓடைநீரை நாடிவரும் மானின் நிலையினில்
உயிரின் தாகம் தீர்க்கும் உந்தன் அன்பை எண்ணியே - நான்
ஏங்கினேன் என் இதயம் திறந்தேன் இனிமை சேர்த்திட வா
இயேசுவே உம் பாதம் தொடர்ந்திடவே ஆற்றலை அளித்திட வா
துணையென நீ வருகையில் தயக்கமில்லையே
துயிலும் போதும் நடக்கும் போதும் கலக்கமில்லையே

பல்லவி - 2
அமைதி உன்னில் காணும்போது வசந்தம் மலருதே
அன்பில் இணைந்து வாழும்போது நிறைவு நெஞ்சிலே - நான்
தேடினேன் உன் வரவில் மகிழ்ந்தேன்
வருந்தும் மனங்களெல்லாம்
இயேசுவே உன் மார்பில் சாய்ந்திடவே பேரருள் பொழிந்திட வா
துணையென நீ வருகையில் தயக்கமில்லையே
துயிலும் போதும் நடக்கும் போதும் கலக்கமில்லையே

ஒருபோதும் உனைப் பிரியா

ஒருபோதும் உனைப் பிரியா பாடல்



ஒருபோதும் உனைப் பிரியா  பாடல் வரிகள்


ஒருபோதும் உனைப் பிரியா
நிலையான உறவொன்று வேண்டும்
என் உடல்கூட எரிந்தாலும்
உன் நாமம் நான் சொல்ல வேண்டும்
நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே- 2
நீங்காத நிழலாக வா இறைவா

பல்லவி - 1
உன் கையில் என்னை நீ பொறித்தாய்
பெயர் சொல்லி அன்பாய் எனை அழைத்தாய்- 2
ஏன் என்னை நீ தெரிந்தாய் என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்
உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் - தாய்
உறவொன்று தேடும் பிள்ளைபோல் நின்றேன்
உன்னோடு நான் வாழுவேன்

பல்லவி - 2
நீர் தேடும் மான் போல தேடி வந்தேன்
நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன்- 2
என்னுள்ளே வாழும் தெய்வம் என்னை நீ ஆளும் தெய்வம்
என் இயேசு நீயே என்னுள்ளம் நின்றாய் - நிதம்
என் பாதை முன்னே நீ தானே சென்றாய்
உன்னோடு நான் வாழுவேன்

என்னோடு நீ பேச வந்தாய்

என்னோடு நீ பேச வந்தாய் பாடல்



என்னோடு நீ பேச வந்தாய்  பாடல் வரிகள்


என்னோடு நீ பேச வந்தாய்
என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்- 2
என் தெய்வமே என் தெய்வமே
நீயின்றி நானில்லையே உன் நினைவின்றி வாழ்வில்லையே

பல்லவி - 1
இதய தாகம் நீ இருளில் தீபம் நீ
உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ
தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்
தீராத துன்பங்களில் நீ தாயாகி தாலாட்டினாய்

பல்லவி - 2
உயிரின் தீபம் நீ உலகின் வேதம் நீ
மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ
என் பாதையில் முன்போக வா
கண் போலவே எனைக் காக்க வா
ஆதாரம் நீயாகவே உன் அன்பொன்றே எனதாகவே

என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே

என் சுவாசக் காற்றே பாடல்



என் சுவாசக் காற்றே  பாடல் வரிகள்


என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னைத் தருவாய்
என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே
இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்

பல்லவி - 1
என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்
நீதானே நீதானே இறைவா
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
தருவாயே தருவாயே தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்

பல்லவி - 2
எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உனைப்போல நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே
ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே - 2
நிழலாய் நினைவாய் வாழ்வினில் வருவாய்

ஏழிசை நாதனே எழுவாய்

ஏழிசை நாதனே எழுவாய் பாடல்



ஏழிசை நாதனே எழுவாய்  பாடல் வரிகள்


ஏழிசை நாதனே எழுவாய் - இறை
அருளை என்னில் நீ பொழிவாய்
பல வரங்கள் தந்து எனைக் காப்பாய்
வழிகாட்ட எழுந்து வருவாய்

பல்லவி - 1
வாழ்வும் வழியும் நீ எனக்கு வளங்கள் சேர்க்கும் அருமருந்து - 2
உறவை வளக்கும் விருந்து - 2
என்னில் நிறைவை அளிக்கும் அருளமுது
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து - 2

பல்லவி - 2
விழியும் ஒளியும் நீ எனக்கு விடியல் காட்டும் ஒளி விளக்கு - 2
மனிதம் வாழும் தெய்வம் - 2
என்னில் புனிதம் வளர்க்கும் நல் இதயம்
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து - 2

செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பட்டோர்

செம்மறியின் விருந்துக்கு பாடல்



செம்மறியின் விருந்துக்கு  பாடல் வரிகள்


செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பட்டோர் பேறுபெற்றோர்
அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க - 2

பல்லவி - 1
இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன
உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன - 2
உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய்
உவகை என்னும் ஒளி கொணர்ந்து என்னை ஆளுவாய்

பல்லவி - 2
வானம் பொழிய பூமி விளையும் வளமும் பொங்குமே
வலமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே - 2
எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே
உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே

உன் சிறகுகள் நிழலில்

உன் சிறகுகள் நிழலில்பாடல்



உன் சிறகுகள் நிழலில்  பாடல் வரிகள்


உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா
எந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண்தணலிலும் மனம் குளிரும் - 2
உந்தன் கண்களின் இமைபோல்
எந்நாளும் என்னைக் காத்திடு என் இறைவா- 2

பல்லவி - 1
பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும்- 2
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும்- 2

பல்லவி - 2
வலையினில் விழுகின்ற பறவை
அன்று இழந்தது அழகிய சிறகை- 2
வானதன் அருள் மழை பொழிந்தே
நீ வளர்த்திடு அன்பதன் உறவை- 2

நீ எந்தன் பாறை

நீ எந்தன் பாறை பாடல்



நீ எந்தன் பாறை  பாடல் வரிகள்


நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே- 2
நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே- 2

பல்லவி - 1
ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ
உன் துணையில் வாழ்கையில் துயர் வெல்லுமோ- 2
தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம்- 2
ஆனாலும் உன் வார்த்தை உண்டு
எது போனாலும் உனில் தஞ்சம் உண்டு இயேசுவே இயேசுவே - 2

பல்லவி - 2
இரவுக்கும் எல்லை ஓர் விடியலன்றோ
முடிவாக வெல்வதும் நன்மையன்றோ - 2
தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம்- 2
என்றென்றும் உன் ஆசீர் கொண்டு
வரும் நல்வாழ்வைக் கண்முன்னே கொண்டு
இயேசுவே இயேசுவே- 2

அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்க

அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்க பாடல்



அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்க  பாடல் வரிகள்


அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்க
நெஞ்சோடு நித்தம் அவர் நினைவிருக்க- 2
உன் தாயின் உதிரத்தால் உனைத் தெரிந்தார்
உன் வாழ்வில் உறவாய் உன்னில் இணைந்தார்

பல்லவி - 2
தீயின் நடுவே தீமை இல்லை
திக்கற்ற நிலையில் துயரம் இல்லை
தோல்வி நிலையில் துவண்டு வாழும்
துன்பம் இனியும் தொடர்ந்திடாது
காக்கும் தெய்வம் காலமெல்லாம் - 2
கரத்தில் தாங்கிடுவார் அன்பின் கரத்தில் தாங்கிடுவார்

பல்லவி - 2
தூர தேசம் வாழ்க்கைப் பயணம்
தேவன் நேசம் உன்னைத் தொடரும்
பாவம் யாவும் பறந்து போகும்
பரமன் அன்பில் பனியைப் போல
வாழும் காலம் முழுதும் உன்னில்- 2
வசந்தம் வீசிடுமே அன்பின் வசந்தம் வீசிடுமே

என் ஆயனாய் இறைவன் இருக்கின்ற போது

என் ஆயனாய் இறைவன் இருக்கின்ற போது பாடல்



என் ஆயனாய் இறைவன் இருக்கின்ற போது  பாடல் வரிகள்


என் ஆயனாய் இறைவன் இருக்கின்ற போது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது- 2

பல்லவி - 1
என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே- 2
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா - 2

பல்லவி - 2
என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் படர்ந்திடும் பாதையிலே- 2
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா

வரம் கேட்டு வருகின்றேன் பாடல்



வரம் கேட்டு வருகின்றேன்  பாடல் வரிகள்


வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா - 2

பல்லவி - 1
பகைசூழும் இதயத்துச் சுவரையெல்லாம் - என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
புகைசூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் - 2 உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்

பல்லவி - 2
நம்பிக்கை இழந்தோரின் முகம் பார்த்தபின் - நல்
நம்பிக்கை பெற வேண்டும் என கேட்கிறேன் - 2
அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்தபின் - 2
உன் அன்பு எண்ணி வரவேண்டும் என கேட்கிறேன்

உங்கள் பயிற்சிக்காக
பல்லவி - 3
நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
பலியாக பிறர்க்கென்னை அளித்திட்டபின் - 2 என்
பரிசாக உனை கேட்கும் வரம் கேட்கின்றேன்

பல்லவி - 4
எளியோர் தம் விழி பேசும் துயரமெல்லாம் - என்
இதயத்தை பிளக்கட்டும் எனக்கேட்கின்றேன் - 2
ஒழியில்லா இல்லங்கள் இதயங்களில் - 2
நல் ஒழியேற்றும் விளக்காக வரம் கேட்கின்றேன்

தீபத்தின் ஒளியினில் இணைவோம்

தீபத்தின் ஒளியினில் இணைவோம் பாடல்



தீபத்தின் ஒளியினில் இணைவோம்  பாடல் வரிகள்


தீபத்தின் ஒளியினில் இணைவோம்
திருப்பலி செலுத்திட விரைவோம் - 2
புனிதம் மலர்ந்திட மனிதம் மகிழ்த்திட

பல்லவி - 1
நல்வாழ்வின் தீபங்களாய் இங்கு நாளெல்லாம் ஒளிர வாருங்களே
நம்வாழ்வின் தேவைகளை தினம் நல்லோர்க்கு இயேசு தந்திடுவார்
அவரின் இல்லம் தினம் வந்தால் - நம் உள்ளங்கள் ஒளியில் நிறைந்திடுமே - 2
அன்பு செய்யும் உள்ளங்களே இறைவனின் அருள் பெறும் இல்லங்களே - 2

பல்லவி - 2
இயேசுவோடு நாம் இணைந்தால் என்றும் நம் வாழ்வில் தோல்விக்கு இடமில்லையே
நன்மை செய்து நீ மகிழ்ந்தால் இங்கு உண்மை ஒளி உனக்கு கிடைத்திடுமே
வார்த்தை இங்கு மனுவானார் - நம் வாழ்வினில் என்றும் குடிகொண்டார் - 2
அன்பு செய்யும் உள்ளங்களே இறைவனின் அருள் பெறும் இல்லங்களே - 2

Friday, 21 July 2017

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம் பாடல்



அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்  பாடல் வரிகள்


அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் பாடுவோம் - 2
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் - 2

பல்லவி - 1
தாயின் கருவிலே உருவாகும் முன்னரே
அறிந்து எங்களைத் தேர்ந்த தெய்வமே
பாவியாயினும் பச்சப் பிள்ளையாயினும்
அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்
மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர்
பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர்
அஞ்சாதே என்று எம்மைக் காத்து வருகின்றீர்

பல்லவி - 2
உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்
உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்
உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர்
உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்
அழித்து ஒழிக்கக் கவிழ்த்து வீழ்த்தத் திட்டம் தீட்டினீர்
கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர்
அஞ்சாதே என்று எம்மைக் காத்து வருகின்றீர்

அழைக்கிறார் இயேசு ஆண்டவர்

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் பாடல்



அழைக்கிறார் இயேசு ஆண்டவர்  பாடல் வரிகள்


அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் - 2
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட - 2
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே

பல்லவி - 1
தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் - 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

பல்லவி - 2
அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் - 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

Thursday, 20 July 2017

அமைதி தேடி அலையும் நெஞ்சமே

அமைதி தேடி அலையும் நெஞ்சமே பாடல்



அமைதி தேடி அலையும் நெஞ்சமே  பாடல் வரிகள்


அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே - 2
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் - 2
அவரன்றி வேறில்லையே

பல்லவி - 1
போற்றுவேன் என் தேவனை பறைசாற்றுவேன் என் நாதனை
எந்நாளுமே என் வாழ்விலே - 2

காடுமேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு
நாடுதே அது தேடுதே - 2

பல்லவி - 1
இறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே
என் தேவனே என் தலைவனே - 2
பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்
என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே - 2

இடைவிடா சகாயமாதா

இடைவிடா சகாயமாதா பாடல்



இடைவிடா சகாயமாதா  பாடல் வரிகள்


இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா
பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள்
நிதம் துணை சேர்ப்பாயே - 2

பல்லவி - 1
ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை
தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் - 2
மாறாத கொடுமை நீங்காத வறுமை
தானாக என்றுமே மாற்றிடுவாள் - 2

பல்லவி - 2
கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி
உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2
வெள்ளம் போல் அருள்கருணை பாய்ந்திட
தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் - 2

இயற்கையில் உறைந்திடும்

இயற்கையில் உறைந்திடும் பாடல்



இயற்கையில் உறைந்திடும்  பாடல் வரிகள்


இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா என் இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு காத்திடு என் தலைவா - 2

பல்லவி - 1
உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ - 2
மெழுகாகினேன் திரியாக வா மலராகினேன் மணமாக வா - 2

பல்லவி - 2
உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுதோ - 2
குயிலாகினேன் குரலாக வா மயிலாகினேன் நடமாட வா - 2

இதை என் நினைவாய்ச் செய்ய மாட்டாயா

இதை என் நினைவாய்ச் செய்ய பாடல்



இதை என் நினைவாய்ச் செய்ய மாட்டாயா  பாடல் வரிகள்


இதை என் நினைவாய்ச் செய்ய மாட்டாயா
என் உடலை உண்டு உயர மாட்டாயா
குருதி அருந்தி திருந்த மாட்டாயா (என்) - 2
என்னைப்போல வாழ மாட்டாயா - இதை

பல்லவி - 1
கன்னத்தில் அறைந்தால் கன்னத்தைக் காட்டச் சொன்னேன்
தீமை செய்தால் நன்மை செய்யச் சொன்னேன் - 2
இதற்கு மேல் நான் என்ன கேட்கின்றேன் - 2
வெறும் வாத்தையல்ல வாழ்ந்தும் காட்டிவிட்டேன் - 2

பல்லவி - 2
பணிவிடை பெற அன்று பணியைச் செய்யச் சொன்னேன்
தாழ்ச்சி கொண்டால் உயர்வு உறுதியென்றேன் - 2
இதற்கு மேல் நான் என்ன கேட்கின்றேன் - 2
உனை வாழச் செய்ய வாழ்ந்தும் காட்டிவிட்டேன் - 2

தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து

தந்திட்ட பொருட்கள் யாவையும் பாடல்



தந்திட்ட பொருட்கள் யாவையும்  பாடல் வரிகள்


தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து
தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய் - 2

பல்லவி - 1
வழங்கிட கனியோ உணவோ இன்றி
வாடிடும் வறியோர் பலர் இறைவா - 2
வெறும் விழிநீர் வியர்வை வேதனை அன்றி
வேறெதும் அல்லா நிலை இறைவா

பல்லவி - 2
உனக்கென எம்மை வழங்கிடும் வேளை
உன்னருள் இவர்க்காய்க் கேட்கின்றோம் - 2
எங்கள் மனம் பொருள் ஆற்றல் அனைத்தையும் இவர்தம்
மனத்துயர் நீங்க படைக்கின்றோம்

அகவிருந்தாக என் இறைவா வா

அகவிருந்தாக என் இறைவா வா பாடல்



அகவிருந்தாக என் இறைவா வா  பாடல் வரிகள்


அகவிருந்தாக என் இறைவா வா - மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா - 2

பல்லவி - 1
1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே - திரு
ஆகமம் முழங்கிடும் உயிர் மொழியே - 2
உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் - 2
உமதுடலென எமை நீ மாற வைத்தாய்

பல்லவி - 2
2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால்
எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் - 2
உமையடைந்திட யாம் தகுதியற்றோம் - 2
இனி உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம்

வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன்

வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன் பாடல்



வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன்  பாடல் வரிகள்


வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன் என்னையே ஏற்றிடுவாய்
முழுமனதுடனே கையளிக்கின்றேன் காணிக்கை ஏற்றிடுவாய் - 2

பல்லவி - 1
கோதுமை மணியும் திராட்சைக் கனியும்
புது உரு பெறுவது போல் - 2
அன்பும் அமைதியும் நீதியுமே
மனிதனில் மலர்ந்திட உயிர் தருவாய் - 2

பல்லவி - 2
நான் வாழ பிறரும் பிறர் வாழ
நானும் தேவை என்றுணர்ந்தேன் - 2
சமத்துவ சோதர நோக்குடனே
புதுயுகம் காண்போம் அகத்தினிலே - 2