Thursday, 13 July 2017

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா

உம்மைத் தேடி வந்தேன் பாடல்



உம்மைத் தேடி வந்தேன்  பாடல் வரிகள்


உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா – 2
உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2

பல்லவி - 1
முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் - 2
பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய்
பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2

பல்லவி - 2
கடல்நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்து உன் பாதம் சேரும் - 2
உலகாளும் தாயே உனை பாடும் வேளை – 2
நகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா – 2

பல்லவி - 3
மலடான மங்கை மடிமீது மகனை
மகிழ்ந்தட செய்த மகிமையின் தாயே - 2
குருடனோர் உன்னை கரம் கூப்பி நின்றால்
அருளாகி அவர்க்கு ஒளி தாரும் தாயே - 2

No comments:

Post a Comment